#image_title
Tim David : டிம் டேவிட் அடித்த சிக்ஸர் பந்தை பிடிக்க முயன்ற டெல்லி ரசிகர் ஒருவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியின் போது மும்பை வீரர் டிம் டேவிட் அடித்த சிக்ஸர் பந்து மைதானத்தில் இருக்கும் ரசிகர் ஒருவரின் முகத்தில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அணியின் இன்ன்னிங்கிஸின் போது டிம் டேவிட் அதிரடியாக விளையாடி கொண்டு இருந்தார். அப்போது, 13.5வது ஓவரில், டேவிட் பந்தை வேகமாக மடக்கி சிக்ஸர் அடித்தார். அந்த சிக்ஸரை மைதானத்தில் போட்டியை ரசித்து கொண்டு இருந்த டெல்லி ரசிகர் ஒருவர் பந்தை பிடிக்க முயற்சி செய்தார்.
ஆனால், அந்த பந்து மிகவும் வேகமாக வந்த காரணத்தால் அவருடைய கைகளில் படாமல் முகத்தில் வேகமாக பட்டு காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்டதை தொடர்ந்து முகத்தில் கர்சீப் வைத்துக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட அந்த ரசிகர் மைதானத்தை விட்டு வெளியேறி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
மேலும், போட்டியை பொறுத்தவரையில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…