தோனியின் மாஸ்டர் பிளான்! 8 ஆண்டு நிறைவு!
கடந்த 2011ஆம் ஆண்டு தோல் உலக கோப்பை தொடரில் தோனி அடித்த சிக்ஸர் நம் இளைஞர்களுக்கு இன்னும் ஞாபகம் இருக்கும். அந்த உலக கோப்பை தொடர் சச்சின் ஜாகிர்கான், கௌதம் கம்பீர், ஹர்பஜன் சிங் என பலருக்கு கடைசி உலகக் கோப்பையை அமைந்தது. எப்படியாவது இதனை வென்று கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் கையில் கொடுத்து விட வேண்டும் என்பதே தோனியின் கனவு. 1992 முதல் 5 உலக கோப்பை தொடரில் ஆடி வந்த அவருக்கு ஒரு உலக கோப்பை தொடர் யாராலும் என்று கொடுக்க முடியவில்லை.
அந்த கனவை நிறைவேற்றும் ஒவராக வந்து இந்திய அணியில் சேர்ந்தார் தல மகேந்திர சிங் தோனி. இந்த உலகக் கோப்பை தொடரை இந்திய அணி அவ்வளவு எளிதாக வென்று விடவில்லை. இந்திய அணியின் குரூப் சுற்று மிகவும் கடினமான அணிகள் நிரம்பியது. தென் ஆப்பிரிக்க அணியிடம் தோற்று காலிறுதிக்கு சென்ற இந்திய அணி தான் இந்த கோப்பையை வென்றது வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதியில் சச்சின் யுவராஜ் ஆகியோரின் அற்புத ஆட்டத்தால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணியால் அந்த போட்டியில் சரியான துவக்கம் இல்லாமல் திணறியது. இறுதிப் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. வெகு விரைவாக இலங்கை அணி தனது பல விக்கெட்டுகளை இழந்தது, இறுதியில் வந்த திசாரா பெரேரா இந்திய பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கி 277 ரன்கள் இலங்கைக்காக சேர்த்தார்.
இந்த இலக்கு அந்த மைதானத்தில் மிகவும் கடினமான இலக்காகும். இந்தியாவின் ஆட்டத்தில் 2வது பந்திலேயே சேவாக் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் அடுத்த சில பந்துகளில் சச்சின் டெண்டுல்கரும் வெளியேறிவிட்டார். இப்படி இருக்க அடுத்து வந்த இந்தியாவின் ஜாம்பவான் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை ஆடி நம்பிக்கை கொடுத்தன.ர் அற்புதமாக ஆடிய கவுதம் கம்பீர் 97 ரன்களிலும் விராட் கோலி 35 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்.
அதன்பின்னரும் 140 ரன்கள் இந்திய அணிக்கு தேவைப்பட்டது. இவர் ஆட்சியில் இறங்க வேண்டிய இடத்தில் சட்டையை மாட்டிக்கொண்டு களமிறங்கினார். மகேந்திரசிங் தோனி அப்படி மாற்றி இறங்கியதில் இந்திய அணிக்கு பெரும் லாபம் காத்திருந்தது. அற்புதமாக ஆடியது அணி கோப்பையை வென்று சச்சின் டெண்டுல்கரின் கையில் கொடுத்து ஆனந்தமடைந்தார் தோனி. எப்படி வெற்றி பெற்ற உலக கோப்பையின் எட்டாவது வருட நினைவு இன்று.