பீப்பி ஊதி இந்திய அணியை உற்சாகப்படுத்திய 87 வயது கிரிக்கெட் ரசிகை ! ஆசிர்வாதம் பெற்ற கோலி ,சர்மா !

நேற்று இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிக்கு இடையிலான 40 -வது லீக் போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.மிகுந்த எதிர்பார்ப்புடன் நடந்த இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இப்போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் அடித்தது. பிறகு 315 ரன்கள் இலக்குடன் இறங்கிய பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இப்போட்டியை காண சாருலதா (87) வயது உள்ள மூதாட்டி ஒருவர் வந்தார். அவர் இந்திய அணிக்காக செய்த செயல்கள் அங்கு இருந்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்போட்டியில் அந்த மூதாட்டி முகத்தில் இந்திய கொடியை வரைந்து கொண்டும் , தேசிய கொடி உள்ள சால்வையை கழுத்தில் போட்டு கொண்டு மைதானத்தில் பீப்பி ஊதி இந்திய அணிக்கு உற்சாகம் அளித்தார்.
இது குறித்து அவரிடம் கேட்கும் போது, நான் ஆப்பிரிக்காவில் இருக்கும் போது பல முறை கிரிக்கெட்டை டிவியில் பார்ந்தேன்.ஆனால் தற்போது வேலையில் இருந்து ஓய்வு பெற்றதால் கிரிக்கெட் போட்டியை நேரில் வந்து பார்த்து உள்ளேன்.
இந்திய அணி உலககோப்பையை கைப்பற்ற எனது வாழ்த்துக்கள்.மேலும் 1983 -ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் இந்திய அணி கபில் தேவ் தலைமையில் இந்தியா உலகக்கோப்பையை வென்றது. அப்போது நானும் மைதானத்தில் இருந்தேன் என கூறினார் .
How amazing is this?!
India's top-order superstars @imVkohli and @ImRo45 each shared a special moment with one of the India fans at Edgbaston.#CWC19 | #BANvIND pic.twitter.com/3EjpQBdXnX
— ICC Cricket World Cup (@cricketworldcup) July 2, 2019
மேலும் போட்டி முடிந்த பிறகு கேப்டன் கோலி , துணை கேப்டன் ரோஹித் இருவருமே அந்த மூதாட்டியிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கினர்.அப்போது அந்த மூதாட்டி அன்பாக இருவருக்குமே முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினர். இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் எனது பிள்ளைகள் எனவும் கூறினார்.