தோனியால் முடியாததை செய்து சாதித்த ரோகித் சர்மா! பட்டியல் உள்ளே!
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது அனைத்து விதமான டி20 போட்டிகளில் 8000 ரன்களை குவித்துள்ளார். நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 30 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக இந்தியாவின் சார்பில் சுரேஷ் ரெய்னா, விராத் கோலி ஆகிய இருவர் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர். தோனி கூட இந்த சாதனையை தற்போது வரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.