7-ம் தேதி 7-ம் மாதம் கிரிக்கெட் உலகின் அதிசயத்திற்கு பிறந்த நாள் – சேவாக்!

Default Image

இன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் , விக்கெட் கீப்பருமான தல தோனியின் பிறந்த நாளை ட்விட்டரில்  ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தல தோனிக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் ட்விட்டரில் தல தோனிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது ட்விட்டரில் வித்தியாசமான முறையில் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பதிவிட்டு உள்ளார்.அந்த பதிவில் “உலகில் மொத்தம் 7 கண்டங்கள், வாரத்திற்கு 7 நாட்கள், வானவில்லுக்கு 7 நிறங்கள், இசைக்கு 7 ஸ்வரங்கள், மனிதர்களுக்கு 7 சக்கரம், திருமணத்திற்கு 7 பொருத்தம், உலகிற்கு 7 அதிசயம் மேலும் 7-ம் தேதி 7-ம் மாதம் கிரிக்கெட் உலகின் அதிசயத்திற்கு பிறந்த நாள் ”

சேவாக்கின் இந்த வித்தியாசமான  பிறந்த நாள் வாழ்த்தை  பல  தோனி ரசிகர்கள் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்