76 பந்துகளில் 16 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களுடன் 172 ரன்கள்!மரண அடி அடித்த ஆரோன் பிஞ்ச்!
ஜிம்பாப்வேக்கு எதிராக டி -20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபிஞ்ச் 172 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் ஆகியவை ஹராரேயில் முத்தரப்பு T20 தொடரில் விளையாடி வருகின்றது. நேற்று நடந்த போட்டியில் ஜிம்பாப்வே – ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. ஆரோன் பிஞ்ச் மற்றும் டி.ஜே.எம். சாட் ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்து அதிர்ச்சியூட்டும் விதமாக விளையாடினார்.
குறிப்பாக, ஆரோன் பிஞ்சின் விளையாட்டு ஆச்சரியமாக இருந்தது. 76 பந்துகளை சந்தித்த அவர் 16 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்களுடன் 172 ரன்கள் எடுத்தார். டி 20 போட்டியில் அதிக ரன்கள் 156 ரன்கள் ஆகும். ஆனால் தற்போது ஆரோன் ஃபிஞ்ச் இந்த சாதனையை முறியடித்து 172 ரன்கள் எடுத்துள்ளார்.இதற்கு முந்தைய சாதனையும் இவருடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் மற்றும் டி.ஜே.எம். ஷார்ட் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்தனர்.டி -20 வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு220 ரன்கள் எடுத்தது இதுவே முதல்முறை ஆகும்.
20 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 229 ரன்கள் எடுத்தது. அடுத்த விளையாடிய ஜிம்பாப்வே அணி வீரர்கள் சொதப்பினார்கள். எஸ்.எப். மிரா மட்டும் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே 9 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது .