இந்திய அணி வெற்றி பெற 72 ரன்கள் நிர்ணயம் …!127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி …!
இந்தியாவிற்கு 72 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜாசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 95 ஒவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் அடித்தது.
அதேபோல் இந்திய பந்துவீச்சில் குல்தீப் ,உமேஷ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக சேஸ் 98 *, ஹோல்டர் 52 ரன்கள் அடித்தனர்.
இந்நிலையில் நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 101.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்கள் அடித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ரஸ்டான் சேஸ் 106,ஹோல்டர் 52 ரன்கள் அடித்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் உமேஷ் 6,குல்தீப் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்நிலையில் இதன் பின்னர் தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 81 ஒவர்களில் 4 விக்கெட்டை இழந்து 308 ரன்கள் அடித்தது.
இதன் பின்னர் 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 106.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 367 ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக பண்ட் 92,ரகானே 80 ,பிரிதிவி 70 ரன்களும் அடித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே அடித்தது.வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக மட்டும் அம்பரீஷ் 38 ரன்கள் அடித்தார்.இந்திய அணியின் பந்துவீச்சில் உமேஷ் 4,ஜடேஜா 3 ,அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.இதனால் இந்தியாவிற்கு 72 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.