தடைக்காலம் 7 ஆண்டுகளாக குறைப்பு ..! 100 விக்கெட் வீழ்த்துவதே என் லட்சியம் -ஸ்ரீசாந்த்!
இந்திய அணி வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடை விதித்தது.அதை உச்சநீதிமன்றம் மார்ச் 15-ம் தேதி நீக்கியது. மேலும் ஸ்ரீசாந்திற்கு எவ்வளவு ஆண்டு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை பிசிசிஐ விசாரணை அதிகாரி ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே ஜெயின் மூன்று மாதத்திற்குள் தெரிவிப்பார் என நீதிபதி கூறினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி டி.கே ஜெயின் நேற்று முன்தினம் ஸ்ரீசாந்திற்கு 7 ஆண்டுகள் தண்டனை எனக் கூறினார். மேலும் அடுத்த வருடம் செப்டம்பர் 12-ம் தேதி உடன் அவர் மீதான தடை நீங்குகிறது என கூறினார்.
இதை பற்றி ஸ்ரீசாந்த் கூறுகையில் ,என் மீதான தடைகளை குறைக்கப்பட்டது மிகவும் சந்தோஷமாக உள்ளது. எனக்கு 36 வயதாகிறது .அடுத்த வருடம் 37 ஆக இருக்கும் .இதுவரை நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 87 விக்கெட்டை பறித்து உள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டை விழ்த்துவதே எனது லட்சியம். விராட் கோலி தலைமையில் விளையாட எனக்கு மிகவும் விருப்பம் உள்ளது என கூறினார்.