வீடியோ: கடைசி ஒவரில் ஹாட்- ட்ரிக் சிக்ஸர் விளாசி காட்டடி அடித்த தல தோனி!!
- ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் தோனி ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தினார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி வீரர்கள் அனைவரும் சொதப்பினார். ஆனால் ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது ஆட்டத்தை காட்டினார்
ஆனால் இறுதி வரை அவுட் ஆகாமல் விளையாடி தோனி, கடைசி ஓவரில் சிக்ஸர் மழை பொழிந்தார். இதனால் சென்னை ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார்.
அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
6, 6, 6: MSD’s perfect finish https://t.co/gHbpmyPZ8K via @ipl
— Sportstwit தமிழ் (@SportstwitTamil) March 31, 2019