கடைசி ஓவரில் 6, 6, 6, 6, 2, 6 ,4 .., ஜடேஜா வரலாற்று சாதனை..!
ஐபிஎல் தொடரின் இன்றயை போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தனர்.
முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். 192 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது. இப்போட்டியில் சென்னை அணி 19 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்தனர். ஆனால், கடைசி ஓவர் போட்டியில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. காரணம் கடைசி ஓவரில் மட்டும் ஜடேஜா 37 ரன்கள் குவித்தார்.
கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரில் ஜடேஜா முதல் இரண்டு பந்தில் சிக்ஸர் விளாசினார். அடுத்த பந்து நோ பால். அதனால் பிரீ ஹிட் வழங்கப்பட்டது. பின்னர், அடுத்தடுத்து சிக்ஸர் , சிக்ஸர், 2, பவுண்டரி, சிக்ஸர் விளாசினார் ஜடேஜா.
ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவரில் 36 ரன்கள் விளாசிய சென்னை வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். இதற்கு முன் ஐபிஎல் தொடரில் கெயில் ஒரு ஓவரில் 36 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.