டெஸ்ட் போட்டியை மற்றொரு தேதியில் நடத்துவது தொடர்பாக இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகபிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதற்கிடையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற இருந்தது. இதனால், நேற்று இந்திய குழுவினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இந்தியாவின் பிசியோ நிபுணர் யோகேஷூக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.ஆனால், இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ என முடிவு வந்தது.
பிசியோ நிபுணருக்கு கொரோனா உறுதியான நிலையில், 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில்,இது தொடர்பாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ஐந்தாவது டெஸ்டை ‘இழக்கும் கேள்வி இல்லை’, இந்தியா-இங்கிலாந்து தொடரின் இறுதிப் போட்டி, மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் வெள்ளிக்கிழமை தொடங்கவிருந்தது.
ஆனால்,கொரோனா எதிரொலி காரணமாக பிசிசிஐ தலைவர், பிசிசிஐ செயலாளர், பொருளாளர்,இணை செயலாளர், ஈசிபி தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் வீரர்கள், கேப்டன், மூத்த வீரர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, மான்செஸ்டரில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
எனினும்,இந்த டெஸ்ட் போட்டியை மற்றொரு மாற்று தேதியில் விளையாடலாமா? என்று இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன”,என்று தெரிவித்தார்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. முதல் போட்டி டிராவில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…