டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்கள்… சிராஜ் புதிய மைல்கல்.!
இந்திய வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்கள் மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதுவரை 19 டெஸ்ட் மைல்கல்லை கடந்துள்ளார்.
சிராஜ் வெளிநாட்டு மைதானங்களில் தொடர்ந்து சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். அவர் எடுத்த ஐம்பது விக்கெட்டுகளில் 38 விக்கெட்டுகள் வெளிநாட்டு மைதானங்களில் வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து மைதானங்களில் சிராஜ் ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
???? Milestone Alert
Congratulations to @mdsirajofficial who completes 5️⃣0️⃣ wickets in Test Cricket ????????????????#TeamIndia | #WTC23 pic.twitter.com/1xcwgWFxS5
— BCCI (@BCCI) June 8, 2023