இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டி ஆண்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.முதலில் களமிறங்கிய இந்திய அணி 96.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 297 ரன்கள் எடுத்து உள்ளது.
இதை தொடர்ந்து நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டம் தொடக்கத்தில் இருந்து விக்கெட்டை இழந்தது.இப்போட்டியில் பும்ரா , டேரன் பிராவோ விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் பும்ரா ஒரு புதிய சாதனையை படைத்து உள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான வெங்கடேஷ் பிரசாத் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரும் 13 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். ஆனால் பும்ரா 11 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டை வீழ்த்தி மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளார்.
அஷ்வின் 9 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும் , இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே 10 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
இந்த சாதனையை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் அனில் கும்ப்ளே என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய ஆட்ட முடிவில் இண்டீஸ் அணி 59 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் எடுத்து உள்ளனர்.இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்க உள்ளது.
சென்னை : மும்மொழி விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நேற்று மாலை கண்டன…
பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE…
டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை…
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார்.…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.…
சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க்' ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க்…