2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …!

கொல்கத்தா வீரர் ரஸ்ஸல் 2 ஓவர் மட்டுமே வீசிய 5 விக்கெட்டை பறித்தார்.
இன்றைய 5-வது ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், கொல்கத்தா அணியும் விளையாடி வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்தனர்.
மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56, ரோகித் 43 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இப்போட்டியில் கொல்கத்தா வீரர் ரஸ்ஸல் 2 ஓவர் மட்டுமே வீசிய 5 விக்கெட்டை பறித்தார். அதிலும் கடைசி ஓவர் வீசிய ரஸ்ஸல் 6 பந்தில் 3 விக்கெட்டை வீழ்த்தினார். கொல்கத்தா அணியில் ரஸ்ஸல் 5, பட் கம்மின்ஸ் 2 , ஷாகிப் அல் ஹசன், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025