இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் ஃபாலோவர்ஸை பெற்றுள்ளதால் விஜய் படத்தின் பின்னணி இசையை போட்டு வீடியோ வெளியிட டேவிட் வார்னர்.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர், கொரோனா ஊரடங்கு காலத்தில் தெலுங்கு பாடலான “புட்டமொம்மா” பாடலுக்கு நடனமாடியது அனைவராலும் பேசப்பட்டது. அதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து விடியோக்களை பதிவிட்டு கொண்டே வருகிறார். அவர் சமீப காலமாக இந்தியா பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சொல்ல போனால், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளின் பாடல், டான்ஸ் என பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு டிக்டாக் புகழான “வணக்கம்டா மாப்ள.. தேனீல இருந்து” அருண் போல இருக்கும் புகைப்படத்தை வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அருண் என்ற அந்த நபருக்கு பதில் வார்னரின் உருவம் இருக்கும். இது இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில், தற்போது வார்னர் இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் ஃபாலோவர்ஸை பெற்றுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் பின்னணி இசையை எடுத்து, ஃபாலோவர்ஸ் அதிகரித்துள்ளதை ஒரு விடியோவாக வார்னர் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…