சிறந்த ஸ்பின் பவுலிங் கொண்ட 5 ஐபிஎல் அணி எது தெரியுமா ?

IPL spin Attack Bowling [file image]

IPL 2024 : நாளை மறுநாள் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு என்பது இருந்து வருகிறது. ஐபிஎல் ரசிகர்கள் பலரும் பல விதமாக அனைத்து அணிகளில் இடம்பெற போகும் வீரர்களை பட்டியல் இட்டு சமூக வலைத்தளத்தில் கலகலப்பாக பேசி வருகின்றனர். அப்படி ரசிகர்களின் பார்வையில் இருந்து வரும் ஒன்றுதான் சிறந்த ஸ்பின் பவுலிங் கொண்ட ஐபிஎல் அணி.

Read More :- IPL 2024 : என்னை ‘கிங்’-னு கூப்டாதீங்க..! ‘விராட்’ னே கூப்டுங்க ..!

நடைபெற போகும் ஐபிஎல் தொடரின் போட்டிகள் இந்தியா என்பதால் இந்தியாவில் உள்ள மைதானங்களில் பல பிட்ச் ஆனது வேக பந்து பவுலிங்கை விட ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகம் அதிகமாக இருக்கும். அதனால் ரசிகர்கள் எந்த அணியின் ஸ்பின் பவுலிங் பலமாக இருக்கும் என கலகலப்பாக பேசி கொண்டு வருகிறார்கள். அப்படி பலம் வாய்ந்த ஸ்பின் பவுலிங் உள்ள ஐபிஎல் அணியை நாம் தற்போது பார்க்கலாம். இதில் 5-வது அணியாக ரசிகர்கள் குறிப்பிடுவது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியாகும்.

லக்னோ அணியில் ரவி பிஷ்னோய், அமித் மிஸ்ரா, குர்னால் பாண்டியா போன்ற வீரர்கள் உள்ளனர். 4-வது அணியாக ரசிகர்கள் குறிப்பிடுவது டெல்லி கேபிட்டல்ஸ் அணியாகும். இந்த அணியில் ஃபார்மில் இருக்கும் குலதீப் யாதவ் மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் உள்ளனர். இந்த இருவரின் பேட்டிங் ஃபார்மும் சிறப்பாக இருக்கும். 3-வதாக ரசிகர்கள் குறிப்பிடும் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான். இந்த அணியில் சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, சுயாஷ் சர்மா போன்ற மிஸ்ட்ரி ஸ்பின் பவுலர்கள் உள்ளனர்.

Read More :- IPL 2024 : லக்னோவ் அணியில் கே.எல்.ராகுல் ரெடி ..! ஆனாலும் ஒரு பிரச்சனை !

2-வதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், மகேஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரா, மொயின் அலி போன்ற வீரர்கள் உள்ளனர். இதில் முதலாவதாக ரசிகர்கள் குறிப்பிடும் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியாகும். ராஜஸ்தான் அணியில் யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆடம் சாம்பா மற்றும் ரியான் பராக் போன்ற வீரர்கள் உள்ளனர். ராஜஸ்தான் அணியில் பலம் வாய்ந்ததே அந்த அணியின் பவுலிங் செக்டின் தான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்