டி20 உலகக்கோப்பையில் கடைசி பந்து வரை சென்ற திரில்லான 5 போட்டிகள் !

T20WC thriller matches

டி20I : டி20 உலகக்கோப்பை வரலாற்றில் கடைசி பந்து வரை விறுவிறுப்பாக சென்ற முதல் 5 போட்டிகளின் சுருக்கத்தை தற்போது பார்ப்போம்.

வருகிற ஜூன்-1 ம் தேதி முதல் தொடங்கவிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பையின் பயிற்சி போட்டிகள் ஒரு பக்கம் நடைபெற உள்ளது. இந்நிலையில், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகவும் விறுவிறுப்பாக சென்ற 5 போட்டிகளை ஐசிசி தங்களது க்ஸ் (X) தளத்தில் பதிவு செய்துள்ளது. அப்போட்டிகளின் சுருக்கங்களை பற்றி பார்ப்போம்.

நெதர்லாந்த் vs இங்கிலாந்து (2009)

இதில் 5வது இடத்தில் 2009ம் ஆண்டு நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் விளையாடி 5 விக்கெட்டுகள் இழந்து 162 ரன்கள் எடுப்பார்கள். அதன் பின் 165 எடுத்தால் வெற்றி என பேட்டிங் களமிறங்கிய நெதர்லாந்து அணி தங்களது முதல் 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுவார்கள்.

அதன் பின் டாம் டி க்ரூத்தின் நங்குற பேட்டிங்கால் (30 பந்துக்கு 49 ரன்கள்) இறுதி வரை நெதர்லாந்த் அணி போட்டியை கொண்டு செல்வார்கள். கடைசி 1 பந்துக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதை கையில் அடித்து விட்டு நெதர்லாந்து பேட்ஸ்மேன்கள் ஓடுவார்கள் ஒரு ரன்களை வெற்றிகரமாக ஓடிய பிறகு 2வது ரன்னுக்கு ஓட்டம் எடுப்பார்கள். அப்போது கையில் இருந்த பந்தை பீல்டர் எங்கோ வீசுவார் இதன் காரணமாக லார்ட்ஸில் ஒரு மிகப்பெரிய வெற்றியை நெதர்லாந்த் அணி பதிவு செய்வார்கள்.

இலங்கை vs இந்தியா (2010) 

இந்த போட்டியில் முதலில் செய்த இந்திய அணி கவுதம் கம்பிர் மற்றும் சுரேஷ் ரெய்னாவின் அதிரடி ஆட்டத்தால் 164 ரன்களை இலங்கைக்கு இலக்காக நிர்ணயித்தனர். பேட்டிங்கை நன்றாக தொடங்கிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் கையை விட்டு நழுவிவிட்ட நிலையில், சாமர கபுகெதராவின் (16 பந்துகளில் 37 ரன்கள்) அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கும். அதிலும் கடைசி பந்துக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர் அடித்து கபுகெதரா வெற்றி பெற வைத்திருப்பார்.

அயர்லாந்து vs ஜிம்பாப்வே (2014)

2014-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து 163 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய அயர்லாந்து அணி மிகவும் தடுமாறியே ஒரு ஒரு ரன்களை சேர்ப்பார்கள். இதனால் இறுதி வரை போட்டி விறுவிறுப்பாக நடைபெறும்.

கடைசி 1 பந்தில் 1 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தை அடிக்காமல் பேட்ஸ்மேன் விடவும் கீப்பரிடம் பந்து சென்று விடும், ஆனால் பேட்ஸ்மேன்கள் ஓடுவார்கள். கைக்கு வந்த பந்தையும் கீப்பர் ரன் அவுட் செய்யாமல் தவறவிடவும் அயர்லாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றிருக்கும்.

ஜிம்பாப்வே vs நெதர்லாந்து (2014)

அதே லீக்கின் இருவருக்குமான மற்றொரு போட்டியில் அதே போல ஜிம்பாப்வே அணி ஐயர்லாந்த் அணியிடம் தோற்றது போல ஜிம்பாப்வே அணியிடம் நெதர்லாந்த் அணி தோல்வி கண்டிருக்கும். இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த நெதர்லாந்த் அணி 140 ரன்கள் எடுத்திருப்பார்கள். அதன் பிறகு பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணி ரன்களை மெதுவாக எடுத்துக்கொண்டிருப்பார்கள்.

இறுதி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மிகவும் த்ரில்லாக போட்டியானது நடைபெறும். ஜிம்பாப்வே அணி முதல் 5 பந்துக்கு 6 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஒரு பந்துக்கு 1 ரன் தேவை இருக்கும். அந்த பந்தை அப்போது களத்தில் இருந்த சிமாண்டா சிக்ஸர் அடித்து பறக்க விட்டு ஜிம்பாப்வே அணியை வெற்றி பெற வைத்திருப்பார். இதுவும் மறக்க முடியாத போட்டியாக அமைந்துள்ளது.

இந்தியா vs பாகிஸ்தான் (2022)

இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே அது எப்போதுமே திரில்லர் தான் அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற இந்த டி20 உலகக்கோப்பையின் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 160 ரன்கள் எடுத்தனர். 161 என்ற இலக்கை விரட்ட களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்பினார்கள். களத்தில் இருந்த விராட் கோலி மட்டும் தனி ஆளாக நின்று பாகிஸ்தான் பவுலர்களை துவம்சம் செய்வார்.

அவருடன் ஒரு கட்டத்தில் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியாவும் நின்று அவருடன் விளையாடுவார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மிகவும் விறுவிறுப்பாக அந்த போட்டி நடைபெறும் அப்போது சரியாக 3 பந்துக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் விராட் கோலி அந்த பந்தை சிக்ஸர் அடித்து போட்டியை கைக்குள் வைத்திருப்பார்.

அதன் பிறகு 1 பந்துக்கு 1 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அஸ்வின் அந்த பந்தை ஃபோருக்கு அடித்து வெற்றி பெற வைத்திருப்பார். இந்த போட்டி தான் டி20 வரலாற்றில் மிகப்பெரிய த்ரில்லர் போட்டியாக ரசிகர்களால் கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்