ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது 50வது சதத்தை அடிக்கும் போது, டிஸ்னியின் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் லைவ் ஸ்ட்ரீமிங்கில் புதிய உலகளாவிய சாதனையைப் படைத்துள்ளது.
இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீச்சை செய்து வருகின்றன. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் களமிறங்கி, நியூசிலாந்தின் பந்துகளை பதம் பார்த்தது.
தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா, டிம் சவுத்தி வீசிய பந்தில், வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து 47 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் விராட் கோலி களமிறங்க, மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில், காலில் ஏற்பட்ட வலி காரணமாக Retired Hurt ஆகி பெவிலியன் திரும்பினார்.
இதன்பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க, விராட் கோலி சிறப்பாக விளையாடி தனது 72வது அரை சதத்தை அடித்து அசத்தினார். தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரும் தனது அரைசதத்தைப் பதிவு செய்ய, சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50வது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.
இந்தாண்டு உலகக்கோப்பையில் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்திருந்த நிலையில், இன்று நியூசிலாந்துக்கு எதிராக 106 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசி, தனது 50வது ஒருநாள் சதம் மற்றும் நடப்பு உலகக்கோப்பையில் மூன்றாவது சதம் அடித்து அசத்தினார்.
இந்த நிலையில் விராட் கோலி தனது 50 ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்வதை 50 மில்லியனுக்கும் (5 கோடி) அதிகமான மக்கள் ஹாட்ஸ்டார் லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்த்துள்ளனர். விராட் கோலி 97 ரன்களை எட்டியவுடன் 4.7 கோடியாக இருந்த பார்வையாளர் எண்ணிக்கை, அவர் 50 ஆவது சதம் அடிக்கும் பொழுது 5 கோடியாக அதிகரித்தது.
இந்த புதிய சாதனை கடந்த நவம்பர் 5 அன்று நடந்த இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா போட்டியின் பொழுது ஹாட்ஸ்டாரில் பதிவு செய்யப்பட்ட 44 மில்லியன் பார்வையாளர்கள் சாதனையை முறியடித்துள்ளது. மேலும், அக்டோபர் 14 அன்று நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் போது ஹாட்ஸ்டார், லைவ்வில் ஒரே நேரத்தில் 35 மில்லியன் பார்வையாளர்களைப் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…