4-வது டெஸ்ட்:மழையால் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பாதிப்பு …!

Published by
Venu

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்டில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இந்தியா 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்ற நிலையில், இரு அணிகள் மோதும் 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கியது.

இந்திய அணி 167.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 193,பண்ட் 159*,ஜடேஜா 81,அகர்வால் 77 ரன்கள் அடித்தனர்.

இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது ஆட்டத்தை தொடங்கியது. 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 83.3 ஓவர்களில் 6விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமா ஹாரிஸ் 79 ரன்கள் அடித்தார்.களத்தில் கம்மின்ஸ் 25*,பீட்டர் 28 *ரன்களுடன் உள்ளனர். இந்திய அணியின் பந்துவீச்சில் குலதீப் 3,ஜடேஜா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.இதன் பின் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இந்தியாவை விட ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் பின்தங்கியது.

322 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில்  ஆஸ்திரேலிய அணிக்கு ‘பாலோ-ஆன்’ வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் மழை பெய்ததால், ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து 4ம் நாள் ஆட்டத்தை பாதியில் ரத்து செய்வதாக  போட்டி நடுவர்கள் தெரிவித்தனர்,

Published by
Venu

Recent Posts

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

1 hour ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

2 hours ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

3 hours ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

3 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

3 hours ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

3 hours ago