ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 -வது ஆஷஸ் போட்டி டிராவில் முடிந்தது.
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் வென்று 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றி கோப்பையை தக்க வைத்தது.
கடந்த 5-ஆம் தேதி 4-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 294 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸை 122 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது.
பின்னர், 265 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 388 ரன்களை இலக்காக வைக்கப்பட்டது. இதைதொடந்து இறங்கிய இங்கிலாந்து அணி 102 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்து 270 ரன்களை எடுத்ததால் போட்டி டிராவில் முடிந்தது. தற்போது 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…