முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்டில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இந்தியா 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்ற நிலையில், இரு அணிகள் மோதும் 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கியது.
இந்திய அணி 167.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 193,பண்ட் 159*,ஜடேஜா 81,அகர்வால் 77 ரன்கள் அடித்தனர்.
இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது ஆட்டத்தை தொடங்கியது. 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 83.3 ஓவர்களில் 6விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமா ஹாரிஸ் 79 ரன்கள் அடித்தார்.களத்தில் கம்மின்ஸ் 25*,பீட்டர் 28 *ரன்களுடன் உள்ளனர். இந்திய அணியின் பந்துவீச்சில் குலதீப் 3,ஜடேஜா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.இதன் பின் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இந்தியாவை விட ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் பின்தங்கியுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…