ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
நடப்பாண்டு ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் கொண்ட முடிவடைந்துள்ளது. இதில், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளிலும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வென்றுள்ளது.
இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் சூழலில் உள்ளது. மறுபக்கம், 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும், இதில் வெற்றி பெற்றால் இரு அணிகளும் நிலையில் இருக்கும். இறுதி போட்டியை வெல்லும் அணியே தொடரை கைப்பற்றும். இதனால் இரு அணிகளும் இன்றைய போட்டியில் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு மத்தியில், இன்று 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மான்செஸ்டரில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா 3 ரன்னில் விக்கெட்டை இழக்க, டேவிட் வார்னர், மார்னஸ் லாபுசாக்னே விளையாடி வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இங்கிலாந்து அணி: பென் டக்கெட், ஜாக் கிராலி, மொயின் அலி, ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் உள்ளனர்.
ஆஸ்திரேலியா அணி: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (WK), பாட் கம்மின்ஸ் (c), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…