454 நாட்கள்.. 15 மாதம்! மீண்டும் களத்தில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்!

Rishabh Pant

Rishabh Pant : கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய ரிஷப் பண்ட் 15 மாத இடைவெளிக்கு பிறகு ஐபிஎஸ் தொடரில் இன்று டெல்லி அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்கியுள்ளார். ஐபிஎல் தொடரின் இன்று பிற்பகல் நடைபெற்று வரும் 2வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

பஞ்சாப்பின் முல்லான்பூர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், 15 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆடு களத்தில் டெல்லி கேப்டனாக களமிறங்கியுள்ளார்.

தனது திறமையால் தனக்குனு ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ரிஷப் பண்ட் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி பெரும் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த பண்ட், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும், பல்வேறு மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தனது உடல்நிலையை சரி செய்து, தற்போது முழு உடற்தகுதியுடன் மீண்டும் ஐபிஎல் தொடர் மூலம் களத்தில் இறங்கி இருக்கிறார்.

பெரும் விபத்துக்கு பிறகு தனது முழு முயற்சியால் மீண்டு வந்துள்ளார். கடும் வலி மற்றும் அவரது அயராத உழைப்பினால், பண்ட் மீண்டும் கிரிக்கெட் விளையாட முழு உடற்தகுதி பெற்றதாக பிசிசிஐ சான்றும் வழங்கியிருந்தது. எனவே, கிட்டத்தட்ட 15 மாதம் 454 நாட்கள் என நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் ரிஷப் பண்ட்டை பார்ப்பது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்