42-வது ஐபிஎல் போட்டி .. கொல்கத்தா – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது.
ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில வலுவாக உள்ள கொல்கத்தா அணியை அவர்களது சொந்த மண்ணில் சந்திக்க உள்ளனர் பஞ்சாப் அணியினர்.
நேருக்கு நேர் :
இந்த இரு அணிகளும் தலா 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் 21 முறை கொல்கத்தா அணியும், 11 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் நேருக்கு நேர் அடிப்படையில் பார்க்கும் போது கொல்கத்தா அணி, பஞ்சாப் அணியை எளிதில் வென்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
கொல்கத்தா அணி
வெங்கடேஷ் ஐயர், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி
பஞ்சாப் அணி வீரர்கள்
ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், சிக்கந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர்.