4 ஓவரில் 4 விக்கெட்… பந்து வீச்சில் மிரட்டும் இந்தியா..!
இலங்கை அணி 4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
நடப்பு உலகக்கோப்பை தொடரின் 33-ஆவது லீக் போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் இலங்கை டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்தது. இந்திய முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 4 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார்.
அடுத்து ஜோடி சேர்ந்த சுப்மன் கில் மற்றும் விராட் கோலி சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்து, இருவரும் அடுத்தடுத்து தங்களது அரை சதங்களை பூர்த்தி செய்தனர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 94 பந்துகளில் 88 ரன்களும், சுப்மன் கில் 92 பந்துகளில் 92 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 56 பந்துகளில் 82 எடுத்து விக்கெட்டை இழந்தார். இறுதியாக 50 ஓவரில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்தது.
இலங்கை அணியை பொறுத்தவரையில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன, பாத்தும் நிஸ்ஸங்க இருவரும் இறங்கினர். முதல் பந்திலே பும்ரா வீசிய பந்தில் எல்பிடபிள்யூவில் டக் அவுட் ஆனார். அடுத்து குசல் மெண்டிஸ் களமிறங்க 2-ஓவரின் 2 பந்தில் தொடக்க வீரர் திமுத் கருணாரத்ன சிராஜ் வீசிய பந்தில் எல்பிடபிள்யூவில் டக் அவுட் ஆனார்.
இருப்பினும் அடுத்து வந்த சதீர சமரவிக்ரம வந்த வேகத்தில் 4 பந்தில் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். 10 பந்து விளையாடிய கேப்டன் குசல் மெண்டிஸ் 1 ரன் எடுத்து சிராஜ் வீசிய பந்தில் போல்ட் ஆனார். இதனால் இலங்கை அணி 4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. தற்போது களத்தில் ஹரிதா அசலங்கா ரன் எடுக்காமலும், ஏஞ்சல் மேதியோஸ் 4 ரன் எடுத்து விளையாடி வருகிறார்கள். இந்திய அணியில் சிராஜ் 3 விக்கெட்டையும் , பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.