3 ஓவரில் 4 விக்கெட் ,,.பந்து வீச்சில் மிரட்டிய தீபக் சஹார் ..!
தீபக் சஹார் 3 ஓவர் மட்டுமே வீசி தீபக் சஹார் 16 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டை பறித்தார்.
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். 221 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக நிதீஷ் ராணா, சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே சுப்மான் கில் டக் அவுட்டானார். அதன் பின்னர் ராகுல் திரிபாதி களமிறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் நிதீஷ் ராணா 9 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர், மோர்கன் 7 மற்றும் சுனில் நரைன் 4 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த 4 விக்கெட்டையும் தீபக் சஹார் வீழ்த்தினார். 3 ஓவர் மட்டுமே வீசி தீபக் சஹார் 16 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டை பறித்தார். கொல்கத்தா அணி மோசமான நிலையில் இருக்கும்போது ராகுல் திரிபாதியும் 8 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ராகுல் திரிபாதி விக்கெட்டை லுங்கி நிகிடி பறித்தார்.
தற்போது கொல்கத்தா அணி 7 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்து 53 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் தினேஷ் கார்த்திக் 6, ரஸ்ஸல் 22 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.