4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம் …!இங்கிலாந்து அபார பந்துவீச்சு …!
இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் செய்தது.
இங்கிலாந்து அணி 122 ஓவர்களில் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பட்லர் 89,குக் 71 ரன்கள் அடித்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா 4, பூம்ரா மற்றும் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஷிகர் தவான் ப்ராட் பந்து வீச்சில் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.இதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ராகுல் இங்கிலாந்து வீரர் சாம் குர்ரான் பந்துவீச்சில் விக்கெட்டை பறி கொடுத்தார்.அதேபோல் புஜாரா 37 ரன்களிலும்,ரகானே 0 ரன்களிலும் விக்கெட்டை பறி கொடுத்தனர்.களத்தில் கோலி 24,விஹாரி 0 ரன்களுடனும் உள்ளனர்.இந்திய அணி 37 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்துள்ளது.
DINASUVADU