நியுஸிலாந்து துப்பாக்கி சூடு எதிரொலி: 3வது டெஸ்ட் போட்டி ரத்து!!
- நியூசிலாந்து தலைநகர் கிறிஸ்ட்சர்ச்சில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது
- தலைநகரில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது அவர்கள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்
வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகளில் முடிவடைந்துள்ள நிலையில் வங்கதேச வீரர்கள் தொழுகைக்காக கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் மசூதிக்கு சென்றார்.
இவர்கள் செல்லும் முன்னர் அங்கு துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருந்தால் சுதாரித்த வீரர்கள் ஒரு வழியாக தப்பி வந்தனர். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை இரு நாடுகளும் பரஸ்பர சம்மதத்துடன் ரத்து செய்துள்ளது. மேலும், நியூசிலாந்தின் கருப்பு தினம் என அந்நாட்டு பிரதமர் அமைச்சர் அறிவித்துள்ளார்.