3வது டி20 போட்டி: மூன்றாவது முறையாக ஆர்ச்சரிடமே வீழ்ந்த சஞ்சு சாம்சன்.!

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் 3 ரன்களில், இங்கிலாந்து அணி வீரர் ஆர்ச்சர் ஓவரில் ரஷித்திடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

Sanju Samson Jofra Archer

குஜராத் : இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 171 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா அணி, ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதனால் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியில் ஹர்திக் 40 ரன்கள் எடுத்தார். இதனிடையே, சஞ்சு சாம்சன், ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் இரண்டு போட்டிகளிலும் அவரது பந்து வீச்சில் சஞ்சு ஆட்டமிழந்திருந்தார்.

நேற்றைய போட்டியிலும் 3 ரன்களில், ஆர்ச்சர் ஓவரில் ரஷித்திடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த போட்டியில் அதிரடி காட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.

குஜராத் ஈடன் கார்டனில் நடந்த முதல் போட்டியில் சஞ்சு 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சென்னையில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் 5 ரன்களுக்கு வீழ்ந்தார். என்னதான், இங்கிலாந்து தொடரில் ஆர்ச்சர், சஞ்சுவின் எதிரி என்பதை நிரூபித்திருந்தாலும், வரவிருக்கும் ஐபிஎல்லில் அவர்கள் இருவரும் ஒரே அணி வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சரை, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 12.5 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. ஐபிஎல் போட்டிகள் மார்ச் 21ம் தேதி தொடங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்