தொடரை இழந்த இந்திய அணி ! நாளைய போட்டியிலாவது வெற்றிபெறுமா? ஏக்கத்தில் இந்திய ரசிகர்கள்

Published by
Venu

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை  கடைசி மற்றும் 3 -வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. 

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 347 என்ற இமாலய இலக்கை இலக்காக நிர்ணையித்தது.ஆனால் இமாலய இலக்கையும் நியூசிலாந்து அணி எளிதாக வென்றது.இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் பேட்டிங் தான்.டி -20 தொடரில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் ஒருநாள் தொடரில் அவர்கள் மீண்டு வந்து இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்கள்.300 ரன்களுக்கு  மேல் என்ற கடின இலக்கை துரத்தும் போது பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடுவது சற்று கடினம் தான்.அந்த வகையில் நியூசிலாந்து அணி வீரர்கள் பங்களிப்பு அதிகம் இருந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்கள் கௌவுரமான ரன்னை அடித்து கொடுக்க நடுவரிசை வீரர்களும் நிலைத்து நின்று ஆடினார்கள்.இதன் விளைவாக நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 348 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது.இதன் பின்னர் 2-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.273 என்ற எளிமையான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயம் செய்தது.ஆனால் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சு இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்தது.பின் நடுவரிசை மற்றும் ஆல் ரவுண்டர்கள் போராடியும் இந்திய அணி  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.மேலும் நியூசிலாந்து அணியிடம் தொடரையும் இழந்தது.தொடரை  2-0 என்ற கணக்கில் கைப்பற்றி டி-20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியதற்கு பழி தீர்த்தது நியூசிலாந்து அணி. இதனையடுத்து 3-வது ஒருநாள் போட்டி நாளை  (பிப்ரவரி 11-ஆம் தேதி) டாருங்காவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அனைவரும் உள்ளனர்.

Recent Posts

Live : திமுக எம்பிக்கள் கூட்டம் முதல் …இந்தியா-ஆஸி. டெஸ்ட் போட்டி வரை..!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…

3 mins ago

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்! 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…

24 mins ago

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி? நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…

1 hour ago

அடுக்கப்பட்ட குற்றச்சாட்டு! அதானி குழுமம் உடனான 2 திட்டங்களை ரத்து செய்தது கென்யா!

நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…

2 hours ago

எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு! திருமாவளவன் பளீச் பேச்சு!

திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…

13 hours ago

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்! உடல்நிலை எப்படி இருக்கிறது? என்ன உணவு உட்கொள்கிறார்?

நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…

14 hours ago