360 டிகிரி கோணத்தில் பந்தை சும்மா சுழற்றி எடுத்த வீரர் நடுவரையும், ரசிகர்களையும்,கிரிக்கெட் வட்டாரத்தையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளார் இந்த வீரர்.
இந்த 360 டிகிரிக்கு சொந்தமானவர் உத்தரப்பிரதேச அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் ஷிவா சிங் இவருடைய பந்து வீச்சு 360 டிகிரி வரை சுழன்று வித்தியாசமான முறையில் பந்துவீசிய சம்பவம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது .சி.கே.நாயுடு கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டிகள் ,23 வயதுக்குட்பட்டோருக்கான நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் – 1 போட்டியில் பெங்கால் மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் மோதிய போட்டியில்தான் தனது வித்தியாசமான ஆக்ஷன் மூலம் அனைவரின் கவனத்தை பெற்றுள்ளார் ஷிவா சிங்.
உத்தரப்பிரதேச அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஷிவா சிங் இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசும்போது பந்தை 360 டிகிரியில் ஒருமுறைச் சுற்றி, தனது ஸ்டைலில் இருந்து சற்று மாறுபட்டு வித்தியாசமாகப் பந்துவீசினார்.அதைத் தடுத்து ஆட ரெடியான பேட்ஸ்மேனும்,ரசிகர்களும்,கிரிக்கெட் வர்னையாளர்களும் இது என்ன மாதிரியான பந்துவீச்சு என பார்த்துக்கொண்டிரும் போதே இதை `டெட் பால்’ என அறிவித்தார் கள நடுவர்.இது எப்படி டெட் பால் ஆகும் என்ற கேள்வியை எழுப்பினார் ஷிவா சிங்.இருந்தாலும் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை நடுவர்.
இவருடைய இந்தப் பந்துவீச்சு குறித்து பிரபல கிரிக்கெட் இணையதள ஊடகமான ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ விடம்( ESPN Cricinfo) ஷிவா சிங் இது குறித்து பேசினார் அதில் நான் ஒருநாள் , டி20 போட்டிகளில் வித்தியாசமான ஸ்டைல்களில் பந்துவீசுவதை வழக்கமாகக் கொண்டு உள்ளேன். இந்தப் போட்டியிலும் அப்படியே இதைச் செய்யலாம் என்று நினைத்து தான் விளையாடினேன் அதற்கு காரணம், எதிரணியான பெங்கால் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் உருவாக்கி வந்தனர். அந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க தான்அப்படி வீசினேன். ஆனால், நடுவர் அதை டெட் பால் என்று அறிவித்துவிட்டார்கள்.
இது குறித்து அவரிடம் கேட்டேன். இதே போல் தான் விஜய் ஹசாரே தொடரில் கேரள அணிக்கு எதிராக இதேபோன்று தான் பந்து வீசினேன்.ஆனால் பேட்ஸ்மேன்கள் ஸ்விட்ச் ஹிட், ரிவெர்ஸ் ஸ்வீப் என பல்வேறு யுத்திகளைப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கையாளுகிறார்கள் அவர்கள் அப்படி கையாளும் போது பந்துவீச்சாளர்களும் புதிய உத்திகளை செய்தால் அதனை டெட் பால் என்கிறார்கள் என்று 360 டிகிரி நாயகன் விரக்தியுடன் கூறினார்.
இதுவரை கிரிக்கெட் உலகிலும் சரி கிரிக்கெட் போட்டிகளிலும் சரி 360 டிகிரியை கையாண்டது இல்லை.மேலும் வித்தியாசமான ஆக்ஷன் கொண்ட பவுலர்கள் கிரிக்கெட் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இதுவரை 360 டிகிரியில் சுற்றி யாரும் பந்து வீசியிருக்க மாட்டார்கள்.அப்படி ஒருவரை கிரிக்கெட் உலகம் கண்டதில்லை என்ற நிகழ்வை தனது 360 டிகிரியை கொண்டே அழித்துள்ளார் ஷிவா சிங்க்.பேட்ஸ்மேன்களை மிரட்டிய இந்த 360 டிகிரி கிரிக்கெட்டின் முத்தாக எதிர்காலத்தில் ஜோலிக்கும் என்கின்றனர் கிரிக்கெட் ஆர்வலர்கள்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…