Punjab Kings : பஞ்சாப் அணி 300 ரன்கள் அடிக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது.
கொல்கத்தா அணி எந்த அளவிற்கு அதிரடியாக விளையாடியதோ அதே அளவுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும் அதிரடியாக விளையாடி 18.4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டி20 போட்டிகளில் அதிக ரன்களை சேஸ் செய்த சாதனையை பஞ்சாப் அணி படைத்தது.
பஞ்சாப் அணியின் ஆட்டத்தை பார்த்து வியந்த பலரும் பாராட்டி பேசி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” சத்தியமாக பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய இந்த போட்டியில் என்ன நடந்தது என்று எனக்கு சத்தியமாக புரியவில்லை. இந்தப் போட்டியில் என்ன நடக்கிறது என்பதை யாராவது சொல்லுங்கள்.
கொல்கத்தா அணி 261- ரன்கள் அடித்தும் எட்டு பந்துகள் மற்றும் எட்டு விக்கெட்டுகளை விட்டுவிட்டு பஞ்சாப் கிங்ஸ் அவர்களை தோற்கடித்தது ஆச்சரியமாக இருக்கிறது. கொல்கத்தாவிலே வைத்து அந்த அணியை வீழ்த்தியது அதுவும் இவ்வளவு பெரிய ரன்கள் சேஸ் செய்து வீழ்த்தியது பெரிய விஷயம். பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் அதிரடியான ஆட்டத்தை துவக்கி வைத்தார். அவரை தொடர்ந்து ஜானி பேர்ஸ்டோ அதிரடி காட்டினார்.
பிறகு ஷஷாங்க் சிங் அவருடைய பங்கிற்கு ஒரு அதிரடியான ஆட்டத்தை காட்டினார். இதன் காரணமாக பஞ்சாப் அணி அசத்தலான வெற்றியை பெற்றது. இவ்வளவு பெரிய டார்கெட்டை அழகாக அடிக்கிறார்கள் என்றால் 300 ரன்கள் அவர்களுக்கு ரொம்ப தூரம் இல்லை என்று தான் நான் சொல்வேன். இந்த ஆண்டு இல்லை என்றாலும் அவர்கள் நிச்சயம் அடுத்த ஆண்டு அடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…