துலீப் ட்ராபி 2024 : 3 இந்திய வீரர்கள் ‘ரூல்டு அவுட்’! மாற்று வீரர்களை அறிவித்தது பிசிசிஐ!

Duleep Trophy 2024

சென்னை : இந்தியாவில் நடைபெற இருக்கும் உள்ளூர் தொடரான துலீப் ட்ராபி தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்களை நீக்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடும் உள்ளூர் தொடரான துலீப் டிராபி டெஸ்ட் தொடரானது வரும் செப்.5ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான 4 அணிகளை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. மேலும், இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது, இந்த தொடர் துவங்குவதற்கு 9 நாட்களே இருக்கும் நிலையில் தற்போது இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளரான முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா மற்றும் அதிவேக பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் ஆகிய 3 வீரர்களை தற்போது பிசிசிஐ இந்த தொடரிலிருந்து நீக்கி உள்ளது. இதற்குக் காரணமாக பிசிசிஐ கூறுவது என்னவென்றால் முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் இருவருக்கும் உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இருவரையும் இந்த தொடரிலிருந்து நீக்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவை இந்த தொடரிலிருந்து நீக்கியதற்கு எந்த காரணமும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கவில்லை. அதனால், அவர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜூக்கு பதிலாக இந்தியா அணியின் மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனியை நியமித்துள்ளனர்.

அதே போல உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் கௌரவ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ருதுராஜ் தலைமையிலான ‘இந்தியா-C’ அணியில் இடம்பெற்றிருந்த உம்ரான் மாலிக் தற்போது நீக்கப்பட்டதால் அந்த அணி சற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது. மேலும், ரவீந்திர ஜடேஜாக்கு பதிலாக இதுவரை எந்த வீரரையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை.

துலீப் ட்ராபி அணிகள்

இந்தியா ‘A’ :

சுப்மன் கில் (கேப்டன்), மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கே எல் ராகுல், திலக் வர்மா, சிவம் துபே, தனுஷ் கோட்டியான், குல்தீப் யாதவ், ஆகாஷ்தீப், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, ஆவேஷ் கான், வித்வத் கவேரப்பா, குமார் குஷாக்ரா, ஷஸ்வத் ராவத்.

இந்தியா ‘B’ :

அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, யாஷ் தயால், முகேஷ் குமார், ராகுல் சாஹர், ஆர் சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி, என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்).

இந்தியா ‘C’ :

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிதார், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், பாபா இந்திரஜித், ஹிருத்திக் ஷோக்கீன், மானவ் சுதர், கௌரவ் யாதவ், வைஷாக் விஜய்குமார், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங்க் மார்கண்டே, ஆர்யன் ஜுயால் (விக்கெட் கீப்பர்), சந்தீப் வாரியர்.

இந்தியா ‘D’ :

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, பாரத். (விக்கெட் கீப்பர்), சௌரப் குமார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்