3-வது டெஸ்ட் போட்டி அணியில் இவர்கள் எல்லாம் இல்லையாம்..!!நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை..!!ஷாக் கொடுக்கும் சாஸ்திரி..!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.
இதில் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடந்தது அதில் இந்திய அணி முதல் டெஸ்டில் வெற்றியை முத்தமிட்டது. அடுத்த 2 வது டெஸ்ட் போட்டியானது பெர்த்தில் நடந்தது.இதில் தோல்வியை தழுவியது.இதனால் முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இரு அனிகளும் டெஸ்ட் தொடரில் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்ற 3வது டெஸ்ட் போட்டியானது வருகின்ற 26ம் தேதி மெல்போர்ன் நகரில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெர்த்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 4 வேகப்பந்து வீச்சாளர்களை களமிறங்கிய இந்திய அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளர்கள் கூட இடம்பெறவில்லை.ஆனால் பெர்த்தை பயன்படுத்திய ஆஸ்திரேலிய அணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோனை மிகஅருமையாக பயன்படுத்தியது. இதனால் அந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி தனது அணியின் வெற்றிக்கு உதவினார் நாதன்.
இதனால் இந்திய அணி ஏன் ஒரு சுழற்பந்து வீச்சாளரை கூட களமிரக்கவில்லை என்று கேள்வி எழுந்தது. இதனால் இந்த கேள்வி குறித்து பதிலளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில் வலைப்பயிற்சியின் போது ரோகித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் காயம் அடைந்தனர்.மேலும் ரவீந்திர ஜடேஜா தற்போது முழு உடல்தகுதியுடன் இல்லை.இதனால் நாங்கள் ரிஸ்க் எடுக்க முடிவு செய்யப்படவில்லை.ஆனால் அவர் தற்போது 80% சதவீத உடல் தகுதியில் இருக்கிறார் என்று அவரே தெரிவித்துள்ளார்.
மெல்பேர்னில் நடக்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்த இருவரில் ஒருவர் மட்டுமே களமிறங்குவார்.இதனிடையே மறுபக்கத்தில் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியாவோ ஒரே ஒரு முதல்தர போட்டியில் மட்டுமே தற்போது விளையாடி உள்ளார். இந்நிலையில் அவரையும் உடனே களத்தில் இறக்குவதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். என்று ரவி சாஸ்திரி கூறினார்.