பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட்!
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் பொட்டின் முதல் இன்னிஸில் இலங்கை 166 ரன்களுக்கு ஆல் அவுட்.
இலங்கைக்கு சென்றுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், காலேயில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, முதல் இன்னிஸில் இலங்கை அணி வீரர்கள் நிசன் மதுஷ்கா மற்றும் கருணாரத்னே தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறினார். இதனால், தொடர் விக்கெட்டை இழந்து இறுதியில் முதல் இன்னிஸில் இலங்கை அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இப்போட்டியில் அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது 4, நசீம் ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து, முதல் இன்னிஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஒரு விக்கெட்டை இழந்து 120 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. களத்தில் அப்துல்லா ஷபீக் 60 ரன்களும், ஷான் மசூத் 51 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.