நாளைய 2-வது டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் தற்போது செய்து விளையாடி வருகிறது. இந்தியா -நியூசிலாந்து ஆகிய இரு அணிகள் இடையே 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதலில் நடைபெற்ற 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது.
இந்நிலையில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையே 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. 20 ஓவர் தொடர் மற்றும் முதல் டெஸ்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி நாளைய டெஸ்டில் போட்டியில் விளையாடுகிறார். கடந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரின் முதல் டெஸ்ட் போட்டி, அறிமுகம் போட்டியிலே முதல் இன்னிங்சில் சதம் விளாசி 105 ரன்களும், 2-வது இன்னிங்சில் அரை சதம் விளாசி 65 ரன்களும் அடித்தார்.
சுழற்பந்தில் அஸ்வின், அக்ஷர் படேல், ஜடேஜா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடும். நாளைய 2-வது டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…