இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியை காண நாளை முதல் டிக்கெட் விற்பனை.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. தற்போது முதல் டெஸ்ட் போட்டி ரசிகர்கள் இல்லாமல் இரு அணிகளும் விளையாடி வருகிறது.
சமீபத்தில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்தது. அதில், கிரிக்கெட் உட்பட அனைத்து போட்டிகளையும் காண 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கலாம் என அறிவித்தது.இதைத்தொடர்ந்து, தமிழக அரசு கிரிக்கெட் போட்டிகளை காண மைதானத்தில் 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், வருகின்ற 13-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, 2-வது டெஸ்ட் போட்டியை காண நாளை முதல் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட் விற்பனை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேரடி டிக்கெட் விற்பனை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக www.paytm.com, www.insider.in ஆகியவை மூலம் நாளை காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மைதானத்த்திற்கு வரும் ரசிகர்கள் கட்டாயம் மாஸ்க் அணிவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விலை குறைந்த பட்சம் ரூ.100 முதலும் அதிகபட்சமாக ரூ.200 வரை விற்கப்படுகிறது.
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…