2-வது டெஸ்ட் போட்டி…சதம் விளாசிய கேப்டன் ரஹானே..!

நேற்று இந்திய , ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 72.3 ஓவரில் 195 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியில் பும்ரா 4 , அஷ்வின் 3, முகமது சிராஜ் 2 , ஜடேஜா ஒரு விக்கெட்டை பறித்தனர்.
இதைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தற்போது 5 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்து 73 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான கேப்டன் ரஹானே 197 பந்தில் சதம் விளாசியுள்ளார், அதில் 11 பவுண்டரி அடங்கும். இது டெஸ்ட் தொடரின் ரஹானேவின் 12 வது சதம் ஆகும்.
தற்போது, களத்தில் ரஹானே 104 *,ஜடேஜா 37 * ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.