2வது டெஸ்ட்:இன்று கடைசி நாள் …!இந்திய அணிக்கு வெற்றி கிடைக்குமா …!
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெருகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் குவித்தது. இந்தியா 283 ரன்கள் எடுத்திருந்தது. 43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது ஆஸ்திரேலிய அணி. 4ஆம் நாள் ஆட்டத்தில் கவாஜா – டிம் பெய்ன் கூட்டணி நிதானமாக ஆடி ரன் சேர்த்து வந்தது. இந்த கூட்டணியை தனது சிறப்பான பந்து வீச்சால் ஷமி கலைத்தார்.
அதன் பின் அடுத்தடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த, ஆஸ்திரேலியா 243 ரன்கள் எடுத்திருந்தது. 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு, ராகுல் ரன் ஏதுமின்றி விக்கெட் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்ததாக புஜாரா 4 ரன்களிலும், கேப்டன் கோலி 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.தொடர்ந்து ஆடிய இந்திய அணி 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 112/5 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெருகிறது.இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் முன்னிலை பெற முடியும்.