2-வது டெஸ்ட்:இந்திய அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்கு…!சமி அபார பந்துவீச்சு …!

Published by
Venu

2-வது டெஸ்ட் போட்டியில்  ஆஸ்திரேலிய அணி இந்திய அணி  287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சின் முதல் நாள் ஆட்டத்தில் தொடக்கத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடி 326 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.
இன்று களமிறங்கிய இந்திய அணி 10 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முரளி விஜய் ரன் ஏதுமின்றி அவுட் ஆனார். ராகுல் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். மூன்றாவதாக புஜாரா 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்ததாக சேர்ந்த ரஹானே – கோலி ஜோடியினர் நிதானமான ஆடி இந்திய அணிக்கு வலுசேர்த்தனர். கோலி சிறப்பாக ஆடி தனது 25வைத்து சதத்தை பூர்த்தி செய்தார்.

3-ம் நாள் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. இறுதியாக 3-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. .இந்நிலையில் 4-ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.இதில் ஆஸ்திரேலிய அணி 93.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 243 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கவாஜா 72 ரன்கள் அடித்தார்.இந்திய அணியின் பந்துவீச்சில் சமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி இந்திய அணி  287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

Published by
Venu

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

2 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

2 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

2 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

2 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

2 hours ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

3 hours ago