2-வது டெஸ்ட்:விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி …!
3-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சின் முதல் நாள் ஆட்டத்தில் தொடக்கத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடி 326 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.
இன்று களமிறங்கிய இந்திய அணி 10 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முரளி விஜய் ரன் ஏதுமின்றி அவுட் ஆனார். ராகுல் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். மூன்றாவதாக புஜாரா 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்ததாக சேர்ந்த ரஹானே – கோலி ஜோடியினர் நிதானமான ஆடி இந்திய அணிக்கு வலுசேர்த்தனர். கோலி சிறப்பாக ஆடி தனது 25வைத்து சதத்தை பூர்த்தி செய்தார்.
3-ம் நாள் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. இறுதியாக 3-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவை விட 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் 4-ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.