2-வது டெஸ்ட் போட்டி:நியூசிலாந்தை வீழ்த்தி 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

Default Image

நியூசிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில்,டிச.3 ஆம் தேதி 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது.இதில்,டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி,முதலில் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 109.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தனர். 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் சாதனை படைத்தார்.

இதைத்தொடர்ந்து, களம்கண்ட நியூசிலாந்து அணி 28.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 62 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.மத்தியில் இறங்கிய ஜேமிசன் மட்டும் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அஸ்வின் 4, முகமது சிராஜ் 3, அக்சர் படேல் 2, ஜெயண்ட் யாதவ் 1 விக்கெட்டை பறித்தனர்.

அதன்பின்னர்,இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய நிலையில்,2-ஆம் நாள் ஆட்ட முடிவில் 70 ஓவர் முடிவில் 276 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து,540 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டாம் லாதம்,வில் யங் களமிறங்கினர்.ஆனால்,வந்த வேகத்திலேயே லாதம் வெளியேற,அவரை தொடர்ந்து,வில் யங்கும் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன்பின்னர்,டெய்லரும் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க,டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்தார்.இதனையடுத்து,7 பவுண்டரி,2 சிக்சர்கள் என 60 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து,இறங்கியவர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க,இறுதியில் நியூசிலாந்து அணியினர் 56.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். இந்திய அணியில்,அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதனால்,நியூசிலாந்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம்,இந்திய அணி தனது சொந்த மண்ணில் 14 முறை தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்