இன்று மழைக்கு வாய்ப்பு.. தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையிலான 2-வது டி20 போட்டி ..!

Published by
murugan

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  டி20 , ஒருநாள்  மற்றும்  டெஸ்ட் தொடர்களில்  விளையாடவுள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்க இருந்தது.

ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து மழை பெய்ததால் தென்னாப்பிரிக்கா – இந்தியா மோத இருந்த முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கான 2-வது போட்டி இன்று  க்கெபர்ஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ்  மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதன் பின்னர், தொடரின் மூன்றாவது போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மழைக்கு வாய்ப்பு:

டர்பனில் நடைபெற இருந்த முதல் டி20 போட்டியில் மழை குறுக்கிட்டது  போல, இன்றை போட்டியிலும் மழை வரலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, மழையால் போட்டி கைவிடப்படலாம். மாலை 5 மணிக்கு மழை பெய்ய  20 சதவீதம் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஈரப்பதம் 73.5% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், இந்த போட்டி உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும். ஆனால் போட்டியின் நடுவில் பனி வருவதற்கான சாத்தியக்கூறுகள் முற்றிலும் இல்லை என்பது நல்ல செய்தியாக உள்ளது. இதனால் இரண்டாவது போட்டியிலும் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்களா..? என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Recent Posts

SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…

6 hours ago

இது அவுட் இல்ல.., மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இஷான் கிஷான் ‘சர்ச்சை’ அவுட்!

ஹைதராபாத் :  இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…

7 hours ago

SRH vs MI : ஒற்றை ஆளாய் மும்பையை எதிர்த்த SRH வீரர் கிளாசென்! வெற்றிக்கு 144 ரன்கள் டார்கெட்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

7 hours ago

பாகிஸ்தானுடன் இனி எந்த உறவும் இல்லை? இந்தியா எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த…

8 hours ago

SRH vs MI : வெற்றிப்பாதையை தொடருமா மும்பை? பேட்டிங் களத்திற்கு தயாரான ஹைதராபாத்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

9 hours ago

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

10 hours ago