இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டி – ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி;இந்திய அணி அபார வெற்றி!

Published by
Edison

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை, இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது டி20 ஆட்டம் இமாச்சலப் பிரதேசம் தரம்சாலாவில் நேற்று நடைபெற்றது.போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி,களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது.இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 184 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில்,அதிகபட்சமாக நிசாங்கா அரைசதம் கடந்து அசத்தினார். இருப்பினும் அவர் 75 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.ஷனாகா 47 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனையடுத்து,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ,ரோஹித் சர்மா இஷான் கிஷன் களமிறங்கிய  நிலையில்,வந்த வேகத்திலேயே 1 ரன் மட்டும் எடுத்து ரோஹித் வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து 16 ரன்கள் மட்டும் எடுத்து இஷான் வெளியே ,அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 74 ரன்கள் எடுத்து அணிக்கு ரன்களை குவித்தார்.

இதனிடையே நிதானமாக விளையாடிய சஞ்சு சாம்சன் 39 ரன்களுடன் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.அதன்பின்னர்,ரவீந்திர ஜடேஜா 45 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் இருந்தார்.இறுதியில் இந்திய அணி 17.1 ஓவர் முடிவிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 186  ரன்கள் எடுத்து ஆட்டத்தை கைப்பற்றியது.

இதனால்,இலங்கை அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.இதனைத் தொடர்ந்து,இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3 வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

2 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

2 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

3 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

3 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

4 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

6 hours ago