2-வது அரையிறுதி.. இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்..?
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 2-வது அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இரண்டாவது அரையிறுதியில் இரண்டு முறை சாம்பியனான பாகிஸ்தான் அணி, மூன்று முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பெனோனியில் உள்ள வில்லோமூர் பூங்காவில் நடைபெறுகிறது.
இறுதிபோட்டிக்கு இந்தியா அணி ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா 9-வது முறையாக இறுதிபோட்டிக்கு சென்றது. ஆனால் இறுதிப்போட்டியில் இந்தியா யாரை சந்திக்கும்..? என்பது இன்று தெரிந்துவிடும்.
இதுவரை நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் தோல்வியை தழுவவில்லை. குரூப் சுற்றில் நியூசிலாந்து, நேபாளம், ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. பின்னர் சூப்பர் சிக்ஸில் அயர்லாந்து மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தியது.
#ISL கால்பந்து : சென்னைக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு அணி..!
மறுபுறம், ஆஸ்திரேலியா குரூப் சுற்றில் நமீபியா, ஜிம்பாப்வே, இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றது. சூப்பர் சிக்ஸில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் உடனான போட்டியின் போது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளிலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். பாகிஸ்தானின் உபைத் ஷா 5 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் கால்ம் விட்லரும் 4 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.