2-வது ஒருநாள் போட்டி …!இந்திய அணி பேட்டிங்…!இந்திய அணியில் ஒரு மாற்றம்…!
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது.இந்திய அணிக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயம் செய்தது.323 ரன்களை இலக்காக கொண்டு களமிரங்கிய இந்திய அணி ,கேப்டன் கோலி ,துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரின் அதிரடியில் 42.1 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 326 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.கேப்டன் கோலி 140 ரன்களும் , துணை கேப்டன் ரோஹித் சர்மா 152 ரன்களும் எடுத்தனர்.
இதேபோல் இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.