2 வது ஒருநாள்:இந்திய அணி அபார வெற்றி!!!2-0 என்ற கணக்கில் முன்னிலை
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 324 ரன்கள் அடித்தது.
இந்திய அணியின் அதிகபட்சமாக ரோகித் சர்மா 87 ரன்களும், ஷிகர் தவான் 66 ரன்களும், விராட் கோலி 43 ரன்களும், மகேந்திர சிங் தோனி 48 ரன்கள் குவிக்க இந்திய அணி இறுதியாக 50 ஓவர்களின் முடிவில் 324 ரன்கள் குவித்தது.
இதன் பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி ஆட்டத்தை 234 ரன்களுடன் 10 விக்கெட்டை இழந்து முடித்துக்கொண்டது.இதன்மூலம் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் வீசி 45 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய அணி.