#IPL2022:ஐபிஎல் போட்டியைக் காண அனுமதி – ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் 2022, 15-வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி,இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது.
70 லீக் போட்டிகள்:
அதன்படி,மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு சர்வதேச மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.பிளே-ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடம் பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது.
அந்த வகையில்,மும்பை – வான்கடே மைதானம் 20 போட்டிகள், மும்பை – பிரபோர்ன் மைதானத்தில் (சிசிஐ) 15 போட்டிகள், மும்பை – DY பாட்டீல் மைதானத்தில் 20 போட்டிகள், புனே – எம்சிஏ சர்வதேச மைதானத்தில் 15 போட்டிகள் என மொத்தம் 70 லீக் போட்டிகள் நான்கு மைதானங்களில் நடைபெற உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டு குழுக்கள்:
இந்த முறை ஐபிஎல் தொடரில் உள்ள அணிகள் இரண்டு குழுக்களாக (IPL 2022 Groups) பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Group A-வில் MI, KKR, RR, DC, LSG, Group B-யில் CSK, SRH, RCB, PBKS, GT ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன ஒரு குரூப்பில் இருக்கும் ஒவ்வொரு அணியும்,எதிர் குரூப்பில் உள்ள 5 அணிகளுடன் இரண்டு முறை விளையாடும். அதேபோல்,அதே குரூப்பில் உள்ள மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை விளையாடும். அதில் 2 ஹோம் மேட்சுகள், 2 வெளியூரில் விளையாடும் மேட்சுகளும் அடங்கும்.
முதல் போட்டி:
மார்ச் 26 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு முதல் போட்டியில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதலுடன் ஐபிஎல் கோப்பைக்கான போட்டி தொடங்குகிறது. இப்போட்டியானது வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
பார்வையாளர்களுக்கு அனுமதி:
ஐபிஎல் 2022 போட்டியைக் காண மைதானங்களில் 25 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ மற்றும் மகாராஷ்டிரா அரசு இடையே நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்,ஐபிஎல் முதல் கட்டத்திற்கு 25 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் குறைந்து வருவதால்,ஆரம்ப போட்டிகளின்போது 25 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்களும்,பின்னர் அடுத்தடுத்த போட்டிகளை காண அதிகமான பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.