அதிரடி காட்டி சதம் விளாசிய ருதுராஜ்… ஆஸ்திரேலியாவிற்கு 223 ரன்கள் இலக்கு..!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷன்டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் கேப்டன் சூர்யா குமார் யாதவ், தொடக்க வீரர் ருதுராஜ் இருவரும் சரிவில் இருந்த அணியை மீட்டுக் கொண்டு வந்தனர்.
நிதானமாக விளையாடிய சூர்யா குமார் யாதவ் 29 பந்தில் 39 ரன்கள் அடித்தார். அதில் ஐந்து பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். ஆனாலும் தொடக்க வீர ருதுராஜ் சிறப்பாக விளையாடி 32 பந்தில் அரைசதம் விளாசினார். அடுத்த சில நிமிடங்களில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 57 பந்தில் 123* ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். அதில் 13 பவுண்டரி, 7 சிக்ஸர் அடங்கும். மறுபுறம் விளையாடிய திலக் வர்மா 24 பந்தில் 31* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டைகளை இழந்து 222 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் கேன் ரிச்சர்ட்சன் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ஆரோன் ஹார்டி தலா 1 விக்கெட்டை பறித்தனர். இந்த தொடரில் இந்திய அணி முதல் 2 போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னியில் உள்ளது.