21 சதங்கள் விளாசி சாதனை படைத்தார் ரோஹித்….சாதனை துளிகள் இதோ..!!

Published by
Dinasuvadu desk

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஹிட்மேன் ரோகித் சர்மா தனது 21-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். ஷிகர் தவான், விராட் கோலி ஆட்டமிழந்த பின்னர், ரோகித் சர்மா பொறுப்பை உணர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33-வது ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி, 98 பந்தில் சதம் அடித்தார்.
இது ரோகித் சர்மாவின் 21-வது சதம் ஆகும். இதன்மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 21-வது சதத்தை கடந்த 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஹசிம் அம்லா 116 இன்னிங்சிலும், விராட் கோலி 138 இன்னிங்சிலும், ஏபி டி வில்லியர்ஸ் 183 இன்னிங்சிலும் 21 சதங்கள் அடித்து முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
ரோகித் சர்மா இந்த சதத்துடன் 186 இன்னிங்ஸ் உடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 200 இன்னிங்ஸ் உடன் 5-வது இடத்தில் உள்ளார்.
தொடக்க வீரராக களம் இறங்கி 19 சதங்கள் விளாசியுள்ளார். அதிவேகமாக 19 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார். ஹசிம் அம்லா 102 இன்னிங்ஸ் உடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். தற்போது ரோகித் சர்மா 107 இன்னிங்ஸில் அடித்து 2-வது இடம் பிடித்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கர் 115 இன்னிங்ஸ் உடன் 3-வது இடத்திலும், 152 இன்னிங்ஸ் உடன் தில்சன் 4-வது இடத்திலும், 172 இன்னிங்ஸ் உடன் கிறிஸ் கெய்ல் 5-வது இடத்திலும் உள்ளனர்.2013-ம் ஆண்டு ஜனவரிக்குப் பின் அதிக சதங்கள் விளாசியர் பட்டியலில் 2-வது இடம்பிடித்துள்ளார். விராட் கோலி 25 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 19 சதங்கள் அடித்துள்ளார். ஹசிம் அம்லா 16 சதங்களும், தவான் 15 சதங்களும் அடித்துள்ளனர்.
தொடர்ச்சியாக 9 தொடர்களில் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார். 1. சாம்பியன்ஸ் டிராபி, 2. இலங்கையில் நடைபெற்ற தொடர் (2 சதங்கள்), 3. இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடர், 4. இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து தொடர். 5. இந்தியாவில் நடைபெற்ற இலங்கை தொடர், 6. தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தொடர், 7. இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடர், 8. ஆசிய கோப்பை, 9. இந்தியாவில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்.
dinasuvadu.com 

Published by
Dinasuvadu desk

Recent Posts

அன்புமணி vs ராமதாஸ் : “உனக்கு விருப்பம் இல்லைனா அவ்வளவு தான்”..மேடையில் நடந்தது என்ன?

புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…

9 minutes ago

நீ ஜெயிச்சிட்ட மாறா! சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி…கண்கலங்கிய தந்தை!

மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும்  "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…

10 minutes ago

ஞானசேகரன் குறித்து மா. சுப்பிரமணியன் ஏன் விளக்கமளிக்கவில்லை? அண்ணாமலை கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…

53 minutes ago

ராமதாஸ் – அன்புமணி மோதல் : “எல்லாம் சரியாகிவிடும்”..எம்.எல்.ஏ.அருள் பேச்சு!

சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…

2 hours ago

தந்தை ராமதாஸ் உடன் வார்த்தை மோதல்! பனையூரில் தனி அலுவலகம் தொடங்கிய அன்புமணி!

விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…

2 hours ago

வன்கொடுமை விவகாரம்: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தர

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…

3 hours ago